• Sun. Apr 5th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் குடிநீர் மற்றும் பீர் விலை உயர இரான் போர் ஏன் காரணமாகக் கூடும்?

Byadmin

Apr 5, 2026


இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 45°C-ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்கள் கோடைக்காலத்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் குடிநீர் கிடைப்பது ஒரு சவாலாகவே உள்ளது, இது, மக்கள் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை குடிக்கக் காரணமாக அமைகிறது.

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 45°C-ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்கள் கோடைக்காலத்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.

ஆனால், இரானுடனான போர் இந்தியாவின் 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாட்டில் குடிநீர் துறையை ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. உற்பத்தியாளர்கள் தங்களுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெறுவதில் பெரும் போராட்டத்தை சந்தித்து வருகின்றனர்.

கடந்த மாதம், சந்தையில் முன்னணியில் இருக்கும் ‘பிஸ்லெரி’ நிறுவனம் தனது விலையை 11% உயர்த்தியது. இதன் மூலம் 12 ஒரு லிட்டர் பாட்டில்கள் கொண்ட ஒரு பெட்டியின் விலை 24 ரூபாய் ($0.26) அதிகரித்துள்ளது.

பெய்லி மற்றும் கிளியர் பிரீமியம் வாட்டர் போன்ற பிராண்டுகளும் விலையை உயர்த்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘டேட்டா ஃபார் இந்தியா’ ஆய்வின்படி, நகர்ப்புறங்களில் சுமார் 15% குடும்பங்களும், கிராமப்புறங்களில் 6% குடும்பங்களும் தங்களின் குடிநீர் தேவைக்காக பாட்டில் தண்ணீரை நம்பியுள்ளனர்.

By admin