• Tue. Jun 23rd, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் கும்பல் வன்முறையில் சிக்கிய இருவர் இப்போது எப்படி உள்ளனர்? பிபிசி கள ஆய்வு

Byadmin

Jun 23, 2026


பசு காவலர், கும்பல் வன்முறை

பட மூலாதாரம், Sandeep Yadav/BBC &

படக்குறிப்பு, பசு காவல் என்ற பெயரிலான கும்பல் வன்முறையில் சிக்கி உயிர் பிழைத்த ஷமீர் மற்றும் நசிர்.

(எச்சரிக்கை: சில விவரங்கள் வாசகர்களை சங்கடப்படுத்தலாம்)

“என் கால் வேலை செய்யவில்லை. விரல்கள் அசையவில்லை. அவை அப்படியே நின்றுவிட்டன, செத்துப்போனது போல. ஆனால் கொசு கடித்தால் தெரிகிறது… அப்படியென்றால் உயிர்ப்புடன்தான் இருக்கின்றன!”

சுட்டெரிக்கும் வெயில் மற்றும் புழுக்கத்திற்கு இடையே, அப்துல் ஷமீர் தன் வேதனையை இப்படி விவரித்தார். 2014 ஆகஸ்ட் 23 அன்று இரவு அவர் மீது தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அவரது உடலின் இடது பகுதி வேலை செய்வதில்லை.

அவரிடமிருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவில் மும்பையில் வசிக்கும் நசிர், 2023-ல் ஒரு பசு காவலர் குழு தன் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டுகிறார். இதில் அவரது நண்பர் அஃபான் உயிரிழந்தார்.

2026 மார்ச் மாதத்தில் தான் மீண்டும் ஒருமுறை பசு காவலர் குழுக்களின் இலக்காக மாறியதாக அவர் குற்றம் சாட்டுகிறார். இந்த முறை நடந்த தாக்குதலில் அவரது இடது கால் உடைந்தது.

By admin