• Sun. Apr 20th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவில் சித்திரவதை, என்கவுன்டர்களை எவ்வளவு போலீசார் ஆதரிக்கின்றனர்? புதிய அறிக்கை வெளிப்படுத்தும் அதிர்ச்சி தகவல்கள்!

Byadmin

Apr 20, 2025


காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

2011 முதல் 2022 ஆம் ஆண்டு வரை, போலீஸ் காவலில் இருந்த 1,100 பேர் இறந்துள்ளனர். இந்தத் தரவு தேசிய குற்றப் பதிவுப் பணியகத்திலிருந்து (NCRB) பெறப்பட்டது.

இது மட்டுமல்லாமல், இதுவரை இந்த மரணங்களுக்கு காரணமான நபர்கள் யாரும் கண்டறியப்படவில்லை.

போலீஸ் காவலில் உள்ள சந்தேக நபர்கள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது நடக்கும் சித்திரவதை பொதுவான ஒன்றாக கருதப்படுகிறது.

ஆனால் இதில் முக்கிய கேள்வி என்னவென்றால், எத்தனை காவல்துறையினர் சந்தேக நபர்கள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்த வேண்டும் என்றும், காவலில் இருக்கும்போது அவர்களை சித்திரவதை செய்ய வேண்டும் என்றும் நம்புகிறார்கள்?

By admin