• Thu. Feb 26th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் ரயில்களில் ‘பயணிக்கும்’ ராஜநாகங்கள் – ஆய்வில் புதிய தகவல்

Byadmin

Feb 26, 2026


இவரது ஆய்வின் மூலம் இந்தியாவில் ராஜநாகங்கள் ரயில்களில் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சூரத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும், ஊர்வன ஆராய்ச்சியாளருமான திகான்ஷ் பார்மர் ஒரு தனித்துவமான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகள் ராஜநாகத்தின் இயற்கையான வாழ்விடமாக உள்ளன. ராஜநாகம் பொதுவாகக் காடுகளில் வாழ்கிறது, ஏனெனில் அங்கு அதற்குத் தேவையான இரை, நீர் மற்றும் பாதுகாப்பான இடம் கிடைக்கிறது.

காடுகளில் வாழும் ராஜநாகங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சூரத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும், ஊர்வன ஆராய்ச்சியாளருமான திகான்ஷ் பார்மர் ஒரு தனித்துவமான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார். இவரது ஆய்வின் மூலம் இந்தியாவில் ராஜநாகங்கள் ரயில்களில் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. காடுகளில் வாழும் ராஜநாகங்கள் எப்படி ரயில் தண்டவாளங்கள் அல்லது ரயில்களை வந்தடைகின்றன?

கோவா செல்லும் பல ரயில் பாதைகள் அடர்ந்த காடுகளின் வழியாகச் செல்கின்றன. ராஜநாகங்கள் சில நேரங்களில் உணவு அல்லது தங்குமிடம் தேடி தண்டவாளங்கள் அல்லது ரயில்களுக்கு அருகில் வருவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதன் மூலம், அவை இயற்கையிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளுக்குச் சென்றடைகின்றன, அங்கு அவற்றுக்கு உணவோ அல்லது பாதுகாப்பான தங்குமிடமோ இருப்பதில்லை.

By admin