• Sun. May 18th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவில் வலுக்கும் துருக்கி புறக்கணிப்பு – நிலவரம் எப்படி மாறுகிறது?

Byadmin

May 17, 2025


துருக்கி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2024 ஆம் ஆண்டில் 3,30100 இந்தியர்கள் துருக்கிக்கு பயணம் செய்துள்ளனர்

துருக்கிக்கு பயணம் மேற்கொள்வதை புறக்கணிக்க வேண்டும் என இந்தியாவில் தொடங்கிய பொதுக் கோரிக்கைகள் தற்போது விரிவடைந்துள்ளது.

துருக்கிய வணிக நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் உள்ள தொடர்புகளையும் இந்தியா துண்டித்து வருகிறது.

சமீபத்திய இந்தியா – பாகிஸ்தான் சண்டையின் போது பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, ராஜ்ஜீய உறவுகள் பதற்றமடைந்துள்ளன.

தேசிய பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து, துருக்கிய நிறுவனமான செலிபி, இந்திய விமான நிலையங்களில் செயல்படுவதற்கு இந்தியா தடை விதித்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை அந்த நிறுவனம் திட்டவட்டமாக மறுத்தது.

By admin