• Sun. Mar 9th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவில் விபத்துகளில் தினசரி பலியாகும் 45 குழந்தைகள் – வாகனங்களில் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது எப்படி?

Byadmin

Mar 9, 2025


இந்தியா: விபத்துகளில் தினசரி பலியாகும் 45 குழந்தைகள் - வாகனங்களில் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

உங்கள் குழந்தைகளைத் தனியாக பள்ளிக்கு அனுப்பிவிட்டு, சரியாக பள்ளிக்குச் சென்று சேர்ந்தார்களா என யோசித்துக் கொண்டிருக்கும் பெற்றோரா நீங்கள்?

மோட்டார் வாகனங்களில் குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது என யோசிக்கிறீர்களா?

நீங்கள் மட்டுமே இந்தப் பிரச்னையை எதிர்கொள்வதில்லை. நாடு முழுவதுமே குழந்தைகளுடன் தொடர்புடைய சாலைப் பாதுகாப்பு விவாதத்திற்குரிய பொருளாகத்தான் இருக்கிறது.

இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு நாளும் சாலை விபத்துகளில் 18 வயதுக்கு உட்பட்ட 45 பேர் மரணமடைவதாக, ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் மற்றும் பெங்களூருவில் உள்ள உளநலன் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான தேசிய நிறுவனம் (NIHMANS) இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.

By admin