• Wed. Jan 14th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் 9 நாளில் 22 பேரை கொன்ற ஒற்றை யானை – என்ன காரணம்?

Byadmin

Jan 14, 2026


புண்டி டோப்னோ

பட மூலாதாரம், Mohammad Sartaj Alam/BBC

படக்குறிப்பு, புண்டி டோப்னோவின் கண் முன்னே அவரது கணவர், மகன் மற்றும் மகளை யானை கொன்றது.

    • எழுதியவர், முகமது சர்தாஜ் ஆலம்
    • பதவி, ராஞ்சியிலிருந்து பிபிசி ஹிந்திக்காக

எச்சரிக்கை: இந்த கட்டுரையில் சில தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம்

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள சாய்பாசா மற்றும் கோல்ஹான் வனப் பிரிவு பகுதிகளில் கடந்த ஒன்பது நாட்களில் ஒரு யானை 22 பேரை கொன்றுள்ளது. இதனால் அப்பகுதி மக்களிடையே யானை குறித்த அச்சம் நிலவுகிறது. செய்தி எழுதப்படும் வரை அந்த யானையைப் பிடிக்கப்படவில்லை.

மாவட்ட ஆட்சியர் சந்தன் குமார் இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ளார். மண்டல வன அதிகாரி குல்தீப் மீனா கூறுகையில், “ஒற்றை ஆண் யானையினால் இத்தகைய சூழல் உருவாவது இதுவே முதல் முறை. இனி உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்படாமல் இருக்க இப்பகுதி ‘ஹை அலர்ட்’டில் வைக்கப்பட்டுள்ளது,” என்றார்.

மேலும் அவர், “உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் இறுதிச் சடங்கிற்காக வனத்துறை சார்பில் இருபதாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, தற்போது அவர்களின் முதல் முன்னுரிமை யானையைப் பிடித்து பாதுகாப்பாகக் காட்டுக்குள் திருப்பி அனுப்புவதுதான். இதற்காக வங்காளம் மற்றும் ஒடிசா குழுக்களின் உதவியுடன் விரிவான மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

By admin