• Wed. Feb 25th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவுக்காக அண்ணன், பாகிஸ்தானுக்காக தம்பி என எதிரெதிரே நின்று சகோதரர்கள் போரிட்ட வரலாறு

Byadmin

Feb 25, 2026


இந்தியா - பாகிஸ்தான், சாஹிப்சாதா யூனுஸ் கான் - சாஹிப்சாதா யாகூப் கான்

பட மூலாதாரம், Saman Ali Khan

படக்குறிப்பு, சாஹிப்சாதா யூனுஸ் கான் (இடது) மற்றும் சாஹிப்சாதா யாகூப் கான் (வலது)

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி இந்தி
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

சர் அப்துஸ் சமத் கான் ராம்பூர் சமஸ்தானத்தின் முதலமைச்சராக இருந்தார். அவரது மூத்த மகன் யூனுஸ் கான், முதலில் டேராடூனில் உள்ள கர்னல் பிரவுன் பள்ளியில் பயின்றார்.

பின்னர் அவர் இந்திய ராணுவ அகாடமிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கிருந்து கர்வால் ரைஃபிள்ஸில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அவரது இளைய மகன் சாஹிப்ஜாதா யாகூப் கான் 1920-இல் பிறந்தார். அவரும் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1940-ல் 18-வது கிங் எட்வர்ட் குதிரைப்படையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அவர்கள் இருவருமே இரண்டாம் உலகப் போரில் பணியாற்றி, இந்திய பொது சேவை பதக்கத்தைப் பெற்றனர்.

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவத்திற்காகப் போரிட யாகூப் ஆப்ரிக்கா சென்றார். அங்கு எகிப்து மற்றும் லிபியா எல்லைக்கு அருகில் நிகழ்ந்த டோப்ருக் போரின் போது இத்தாலியப் படைகளால் அவர் சிறைபிடிக்கப்பட்டார்.

By admin