• Sat. Jan 10th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவுக்கு அமெரிக்கா 500% வரி விதித்தால் என்ன நடக்கும்? டிரம்ப் திட்டம் பற்றி நிபுணர்கள் அலசல்

Byadmin

Jan 9, 2026


அமெரிக்கா, ரஷ்ய தடைகள் மசோதா, 500 சதவீத வரி,  இந்தியா, ரஷ்யா, எண்ணெய் இறக்குமதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம்

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரை வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய மசோதா குறித்த விவாதங்கள் தற்போது சர்வதேச அளவில் அதிகரித்துள்ளன

‘ரஷ்ய தடைகள் மசோதா’ என்று அழைக்கப்படும் இந்த மசோதா, அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டால், ‘லிண்ட்சே கிரஹாம் மசோதா’ என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ரஷ்யாவிலிருந்து மலிவு விலையில் எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளைத் தடுக்கும் வகையில் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

அந்த சூழலில், இந்தியாவின் முன் இரண்டு விருப்பத் தெரிவுகள் மட்டுமே இருக்கக்கூடும். இந்தியா 500 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டும் அல்லது ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும்.

டொனால்ட் டிரம்பின் இத்தகைய தொடர்ச்சியான முடிவுகளைப் பார்க்கும்போது, அமெரிக்க அதிபரின் அதிகாரத்திற்கு ஏதேனும் எல்லை உள்ளதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

By admin