• Fri. Oct 3rd, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவுக்கு ஆசிய கோப்பை கப் வேண்டுமென்றால் – நக்வி வைத்த ஒற்றை நிபந்தனை

Byadmin

Oct 2, 2025


2024 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 37வது தலைவராக மொஹ்சின் நக்வி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2024 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 37வது தலைவராக மொஹ்சின் நக்வி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் உள்ளார்.

ஆசியக் கோப்பை தொடர் நடந்து முடிந்துவிட்டது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஒன்பதாவது முறையாக பட்டத்தை வென்றது. போட்டி முடிந்து நான்கு நாட்கள் கடந்துவிட்டன, ஆனால் இன்னும் போட்டியைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் தணியவில்லை.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆசியக் கோப்பை 2025 இன் நிறைவு விழா, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பதற்றங்களை உண்மையாகவே பிரதிபலிப்பதாகத் தோன்றியது.

அதேபோல் இப்போட்டியின் பல ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக, வெற்றி பெற்ற அணி கோப்பையை எடுத்துச் செல்லாமல் மைதானத்தை விட்டு வெளியேறியுள்ளது.

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு ஏற்பட்ட சலசலப்புக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) மன்னிப்பு கேட்டதாகக் கூறி இந்திய ஊடகங்களில் சில செய்திகள் வெளிவந்தன.

By admin