1
பாகிஸ்தான், இந்தியாவுடன் கடுமையான மோதல் நிலைப்பாட்டை எடுத்ததால், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ரூ.127 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பதிலடி நடவடிக்கையாக இந்தியா சிந்து நதியின் நீரை நிறுத்த நடவடிக்கை எடுத்தது. இதற்கு பதிலளிக்க பாகிஸ்தான், இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடியது.
தொடர்புடைய செய்தி : பாகிஸ்தான் வான்பரப்பில் பறக்க இந்திய விமானங்களுக்கான தடை தொடர்கிறது!
இந்த தடை, ஏப்ரல் 24 முதல் தொடர்கிறது. இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை தவிர்த்த பின், அதன் வழியாக செல்லும் விமானங்களை இழந்து, பாகிஸ்தான் இந்தக் காலக்கட்டத்தில் ரூ.127 கோடி வருமான இழப்பை சந்தித்தது.
இத்தகவல் பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
இழப்புகள் இருந்தபோதும், பாகிஸ்தான் விமான நிலைய ஆணையத்தின் மொத்த வருவாய் 2019ல் 5.08 இலட்சம் டொலரிலிருந்து 2025ல் 7.6 இலட்சம் டொலராக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.