• Mon. Feb 2nd, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவுடன் விளையாட மறுக்கும் பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை – என்ன நடக்கிறது?

Byadmin

Feb 2, 2026


இந்தியா, பாகிஸ்தான், டி20 உலகக்கோப்பை, ஐசிசி

பட மூலாதாரம், AFP via Getty Images

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) எச்சரித்துள்ளது.

இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனைத்து தரப்பு நலன்களையும் காக்கக் கூடிய, பரஸ்பரமாக ஒப்புக் கொள்ளக்கூடிய தீர்வை கண்டுபிடிக்கும் என நம்புவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் முடிவுக்கு ‘பாரதூரமான விளைவுகள்’ இருக்கும் என ஐசிசி குறிப்பிட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் டி20 உலகக்கோப்பை பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கி மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியை பிப்ரவரி 15-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்காது என அந்நாட்டு அரசு ஞாயிறன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. இந்த முடிவுக்கு எந்த காரணமும் பாகிஸ்தான் அரசால் வழங்கப்படவில்லை.

By admin