• Mon. Feb 9th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை வேளாண் அமைப்புகள் எதிர்ப்பது ஏன்? மூன்றே மாதங்களில் பருத்தி விவசாயிகளுக்கு என்ன நடந்தது?

Byadmin

Feb 9, 2026


இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம், வேளாண் அமைப்புகள் எதிர்ப்பு, மூன்றே மாதங்களில் பருத்தி விவசாயிகளுக்கு என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – இந்தியப் பிரதமர் மோதி

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் பல்வேறு வகையான உணவு மற்றும் விவசாய பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளை இந்தியா நீக்கியுள்ளதாக வெளிவந்த செய்திகளுக்கு மத்தியில், விவசாய அமைப்புகள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.

விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா, இந்த வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய அரசாங்கத்தின் ‘முழுமையான சரணடைதல்’ என்று வர்ணித்துள்ளதுடன், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ‘உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளையில், வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டு அறிக்கையை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் பியூஷ் கோயல், ‘முக்கியமான விவசாயம் மற்றும் பால் பண்ணை பொருட்களில்’ இந்திய விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் சனிக்கிழமை கூறுகையில், “விவசாயிகளே எங்களுக்கு மிக முக்கியமானவர்கள். மதிப்பிற்குரிய பிரதமரின் தலைமையின் கீழ், இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அரசாங்கம் மக்களுக்கு ‘துரோகம்’ இழைத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

By admin