• Wed. Feb 4th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் இந்த 3 கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை ஏன்?

Byadmin

Feb 4, 2026


ரஷ்யா, எண்ணெய், பிரதமர் மோதி, அதிபர் டிரம்ப்

பட மூலாதாரம், JIM WATSON/AFP via Getty Images

பிப்ரவரி 2, திங்கட்கிழமை அன்று இந்தியாவும் அமெரிக்காவும் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தன.

இருப்பினும் இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் காலக்கெடு குறித்த தகவல்கள் ஏதும் பொதுவெளியில் பகிரப்படவில்லை.

இறுதி கட்டப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தத்தின் விவரங்கள் முடிவு செய்யப்பட்டு வருவதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளங்களில் இந்த ஒப்பந்தம் குறித்து பதிவிட்ட பல கருத்துக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோதியோ அல்லது இந்திய அரசாங்கத்தின் தரப்பில் இருந்தோ தெளிவான பதில் எதுவும் இல்லை.

இது, இந்த ஒப்பந்தம் தொடர்பான பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

By admin