• Tue. May 13th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுக்கு மௌனம் காப்பது ஏன்?

Byadmin

May 13, 2025


இந்தியா - பாகிஸ்தான், அமெரிக்கா, டிரம்ப் - மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டை நிறுத்தத்தில் தன்னுடைய பங்கு பற்றி பெருமிதப்படும் டொனால்ட் டிரம்ப்

  • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
  • பதவி, பிபிசி செய்தியாளர்

பாகிஸ்தானின் விமானத் தளங்களைத் தாக்கி சேதப்படுத்தியதாகக் இந்தியா கூறினால், நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என பாகிஸ்தானும் இந்திய விமானத் தளங்களை தாக்கியதாக சனிக்கிழமையன்று (2025 மே 10) தெரிவித்தது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் உச்சத்தில் இருந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவும், துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் தீவிரமாகச் செயல்பட்டனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று பிற்பகலில் முப்படைகளின் தலைவர்களை சந்தித்து கலந்தாலோசித்தார். அதனைத் தொடர்ந்து, ‘எதிர்காலத்தில் எந்தவொரு தீவிரவாத சம்பவம் நடைபெற்றால் அது போர் நடவடிக்கையாக கருதப்படும்’ என்று இந்தியா தெரிவித்தது.

By admin