பட மூலாதாரம், Getty Images
சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கிய இடத்திலிருந்து 1,000 கி.மீ தள்ளியும், முடிந்திருக்க வேண்டிய இடத்திலிருந்து 2,000 கி.மீ அப்பாலும் நிறைவடைந்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
கடந்த ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றி உலகின் முன்னணி ‘வெள்ளை பந்து’ அணியாக அதன் இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. 16 மாதங்களுக்கு முன்பு ஆமதாபாத்தில் 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் இந்திய அணி அனுபவித்த வேதனையைக் குறைத்துள்ளது.
துபை நகரில் ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்கள் இதனை கொண்டாடினாலும், இந்த தொடரில் நடந்த சில தவிர்க்க இயலாத விஷயங்கள் சர்வதேச கிரிக்கெட் வழிநடத்தும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும்.
இந்த தொடரில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆடிய போட்டிகள் ஒரு கண்காட்சி போல இருந்தன. மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெற்றன.
ஒரே இடத்தில் ஆடிய, இந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் அந்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டன. இந்திய வீரர்களின் பெயர் பொறித்த ஆடை அணிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இந்தியா விளையாடும் போட்டிகள் நடைபெற்றன.
ஹர்திக் பாண்டியா துபையில் இருந்த போது “குங்-ஃபூ பாண்ட்-யா!” என்று காதைப் பிளக்கும் கூச்சலுடன் களம் கண்டார். இதே போன்று லாகூரில் ஓர் அறிமுகம் அவருக்கு கிடைத்திருக்குமா?
துரதிர்ஷ்டவசமாக, நாம் ஒருபோதும் அறிய மாட்டோம்.
இது தெளிவுபடுத்தப்பட வேண்டும், இங்கே இதற்கு எளிதான பதில்கள் இல்லை.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கு கிடைத்த சாதகம்
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால அரசியல் பதற்றங்கள் காரணமாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்யப்போவதில்லை என்று இந்தியா அறிவித்தது. அப்போது முதலே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒரு சவாலை எதிர்கொண்டு வருகிறது.
இந்தியா இல்லாமல் போட்டியை நடத்துவதா? ஐ.சி.சி. வருமானத்தில் இந்திய சந்தை கணிசமான பகுதியை கொண்டுள்ளது.
29 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ள பாகிஸ்தானிடமிருந்து கடைசி நிமிடத்தில் அதனைப் பறிப்பதா? அதுவும் சாத்தியம் இல்லை.
இதன் விளைவாக இந்தியா ஒரே ஹோட்டலில் தங்கியிருந்து ஒரே நகரத்தில் தனது போட்டிகள் அனைத்தையும் விளையாடியது. இந்திய அணிக்கு கிடைத்த இந்த சாதகங்கள் குறித்து சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வந்தன.
நியூசிலாந்து அணி 7,000 கி.மீ., துாரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் ஓர் இந்திய வீரர் அதிகபட்சம் பயணிக்க வேண்டிய தூரம் வெகு சொற்பமே. அதாவது நடந்தே கடக்க வேண்டிய தூரம் மட்டுமே.
ஒரே மைதானத்தில் விளையாடியது “நிச்சயமாக” தங்களுக்கு உதவியது என்று அரையிறுதிக்குப் பிறகு முகமது ஷமி கூறும் வரை, இந்தியா அதனை மறுத்தே வந்தது.
இந்தியாவுக்கு சாதகமான சூழல் உள்ளதாக கூறுபவர்கள் இன்னும் “வளர வேண்டும்” என்றே இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அதற்கு முன்பு வரை கூறி வந்தார்.
தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை ஆதரிக்கப் போவதாக கூறும் வரை மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த விவகாரத்தில் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம்
வீரர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசுங்கள், இந்தியா வைத்திருக்கும் அதிகாரம் தெரியும். இதுதான் சர்வதேச கிரிக்கெட் செல்லும் பாதை.
2023-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது, இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் கடைசி நிமிடத்தில் அரையிறுதி ஆடுகளம் மாற்றப்பட்டது என்ற சர்ச்சை எழுந்தது.
எட்டு மாதங்களுக்கு முன்பு, கயானாவில் நடந்த டி20 அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்தை தோற்கடித்தது. ரோஹித் சர்மா மட்டுமே புறப்படுவதற்கு முன்பு தனது அணியின் போட்டிகள் எங்கு விளையாடப்படும் என்பதை அறிந்திருந்தார்.
இந்திய ரசிகர்கள் தொலைக்காட்சி நேரலையை கண்டு களிக்க ஏற்றவாறு காலை 10:30 மணிக்கு போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை இந்தியாவின் கடைசி லீக் போட்டி ஒரு ஞாயிற்றுக்கிழமை விளையாடப்பட்டது. அது இந்தியாவில் தொலைக்காட்சி பார்வையாளர்கள் அதிகமாக உள்ள நேரம். இதனால் தென்னாப்பிரிக்கா துபைக்கு பறந்து வர வேண்டியிருந்தது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்த பாகிஸ்தானுக்குத் மீண்டும் திரும்ப வேண்டிய கேலிக்கூத்தான சூழ்நிலை ஏற்பட்டது.
ஒரு போட்டி நடத்துவதால், அந்த போட்டியை நடத்தும் நாட்டுக்கு சாதகமான விசயங்கள் கிடைக்கும் என்பது இயல்பு. ஆனால் உங்கள் எதிராளிகள் நடத்தும் ஒரு தொடரிலும் அதேபோன்ற நன்மைகளை நீங்கள் பெறுவது முற்றிலும் மாறுபட்டது.
நிச்சயமாக, இது எதுவும் இந்திய வீரர்களின் தவறு அல்ல.
இந்த வாரம் இறுதிப் போட்டிக்கு முந்தைய கேப்டன்களின் நேர்காணலுக்கு துணை கேப்டன் சுப்மன் கில்லை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்திய ரோஹித் சர்மான மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவரும் 50 ஓவர் விளையாட்டுகளில் சிறந்த வீரர்கள்.
நியூசிலாந்துக்கு எதிராக வெற்றிக்கான ரன்னை எடுத்த ரவீந்திர ஜடேஜாவும் வெகு தொலைவில் இல்லை. வாய்ப்பு வழங்கப்பட்டால் கில்லும் அந்த இடத்ற்கு வரக்கூடும்.
இந்த போட்டி எங்கு விளையாடப்பட்டிருந்தாலும் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்ற அளவுக்கு இந்திய அணி பலம் வாய்ந்ததாக உள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் காயம் காரணமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரும்பாலும் மறந்தே போய்விட்டது.
பட மூலாதாரம், Getty Images
ஐசிசி போட்டிகள் சலிப்பு தருகின்றனவா ?
பணம் கொழிக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு எதிர்வினையாக ஐசிசி ஆண்கள் போட்டிகள் கருதப்படுகின்றன. வருகிற 2031-ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் சாம்பியன்ஸ் டிராபி, டி20 அல்லது 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெறும் என்கிற அளவுக்கு ஐசிசி போட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. ஆனால், இந்த போட்டிகள் அடிக்கடி நடத்தப்படுவதாலும், ஒரே மாதிரியான வடிவத்தைப் பின்பற்றுவதாலும், சலிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் யாரும் போட்டிக்கு வரவில்லை.
இங்கிலாந்து அணி தொடரில் இருந்து மோசமாக வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் மற்ற நாடுகளில்?
இந்த போட்டியைப் பற்றி குடும்ப வாட்ஸ்அப் குழுவில் வந்திருக்கும் தகவல்களைப் பார்த்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த போட்டியின் ஏற்பாடு குழப்பங்கள் நிறைந்ததாக இருந்தது. போட்டி தொடங்குவதற்கு 57 நாட்களுக்கு முன்புதான் அதன் அட்டவணை உறுதிப்படுத்தப்பட்டது.
கயானா அரையிறுதியை எந்த ஆங்கில ஊடகங்களாலும் பார்க்க முடியவில்லை. கடைசி நேரத்தில் விமான பயணங்களை முடிவு செய்ய இயலவில்லை, விமானங்கள் குறைவாக இருந்தன. பாதுகாப்பு காரணங்களால் அமெரிக்க அதிகாரிகளால் பயணம் செய்வது குறித்து எச்சரிக்கப்பட்ட நாடுகளில் கயானாவும் ஒன்றாகும். கிரிக்கெட்டில் இதுபோன்ற விஷயங்கள் எளிதாக கடந்து செல்லப்படுகின்றன.
அடுத்தடுத்த போட்டிகளிலும் குழப்பங்கள் தொடரும்
அடுத்த இரண்டு போட்டிகளில் – இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை மற்றும் 2026 -ல் நடைபெறும் ஆண்கள் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் விஷயங்கள் எளிதாக இருக்காது.
இரண்டுமே இந்தியாவில் நடைபெறும். டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவுடன் இலங்கையும் கூட்டாக நடத்துகிறது. அதாவது பாகிஸ்தான் தகுதி பெற்றால் தற்போது இந்திய அணிக்கு கிடைத்த அனைத்தும் அவர்களுக்கும் கிடைக்கும்.
இந்தியாவுக்கு இருந்த அதே நன்மைகள் பாகிஸ்தானுக்கு கிடைக்கலாம். ஆனால், இரு இடங்கள் இறுதிப் போட்டிக்காக தேவைப்படுவது போன்ற நிச்சயமற்ற தன்மைகள் எதுவும் அந்த தொடரிலும் மாற போவதில்லை.
இதன் அர்த்தம் நம்பிக்கை போய்விட்டது என்பதல்ல.
சர்வதேச கிரிக்கெட்டிற்கான அச்சுறுத்தல் என்ன?
இரண்டு வாஷ் அவுட்கள் மற்றும் பல ஒருதலைப்பட்ச ஆட்டங்கள் இருந்த போதிலும், சர்வதேச வெள்ளை பந்து கிரிக்கெட் வலுவாக உள்ளது என்பதை சாம்பியன்ஸ் டிராபி மீண்டும் நிரூபித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஜோஷ் இங்லிஸின் சதம் எப்போதும் நிலைத்து நிற்கும். ரவீந்திரா விளையாட்டின் அடுத்த நட்சத்திரங்களில் ஒருவராக உருவெடுத்து வருகிறார். ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா ஒமர்சாய் விரும்பக்கூடிய வீரர்களில் ஒருவராக உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல் தரம் அல்ல, மாறாக அக்கறையின்மைதான்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு