• Sun. Oct 6th, 2024

24×7 Live News

Apdin News

இந்தியா இந்த விஷயத்தில் ஆப்கன், பாகிஸ்தான் வரிசையில் இருப்பது ஏன்?

Byadmin

Oct 6, 2024


திருமண உறவில் பாலியல் வன்கொடுமை, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (சித்தரிப்புப் படம்)

திருமண உறவில் பாலியல் வன்கொடுமையை குற்றம் என்று அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை எதிர்த்த இந்திய அரசு, அது “மிகக் கடுமையானது” என்று கூறியது.

“தனது மனைவியை உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்த எந்த ஆணுக்கும் உரிமை இல்லை. ஆனால் திருமணமான பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்க போதுமான சட்டங்கள் உள்ளன,” என்று மத்திய உள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

திருமண உறவில் பாலியல் வன்கொடுமை செய்யும் ஆணுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என்ற பிரிட்டிஷ் கால சட்டத்தில் திருத்தம் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

“இந்தியாவில் திருமண உறவுக்குள் பாலியல் வன்முறை பரவலாக உள்ளது. 25 பெண்களில் ஒருவர் தங்கள் கணவரால் பாலியல் வன்முறையை அனுபவிக்கிறார்” என்று சமீபத்திய அரசு ஆய்வு தெரிவிக்கிறது.

By admin