• Mon. Jan 27th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா – இலங்கை: யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தின் பெயர் சூட்டு விழாவில் என்ன சர்ச்சை?

Byadmin

Jan 26, 2025


இலங்கை: கலாசார மண்டபத்துக்கு திருவள்ளுவர் பெயரை சூட்டியதால் சர்ச்சை - இந்தியா செய்தது என்ன?

பட மூலாதாரம், INDIAN HIGH COMMISSION IN COLOMBO

படக்குறிப்பு, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையம்

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மண்டபத்திற்கான பெயர் சூட்டு நிகழ்வினால் எழுந்த சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மண்டபத்திற்கு ”திருவள்ளுவர் கலாசார மையம்” எனப் பெயர் சூட்டப்பட்டமைக்கே இவ்வாறு எதிர்ப்பு எழுந்திருந்தது.

தமிழ் மக்களின் அடையாளங்களுள் ஒன்றான ‘யாழ்ப்பாணம்’ என்ற பெயர் நீக்கப்பட்டிருப்பதானது, தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சி என அரசியல்வாதிகள் மற்றும் புத்திஜீவிகள் குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையம் எனத் தற்போது பெயர் மாற்றப்பட்டு, சர்ச்சைக்குத் தீர்வு வழங்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.



By admin