• Fri. Feb 20th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு டிரம்ப் விதித்த வரி ரத்து – அமெரிக்க உச்சநீதிமன்றம் கூறியது என்ன? நேரலை தகவல்

Byadmin

Feb 20, 2026


உலக நாடுகளுக்கு டிரம்ப் விதித்த வரியை ரத்து செய்த அமெரிக்க உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இச்செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

அமெரிக்காவின் உச்சநீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அமல்படுத்திய உலகளாவிய இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் என கூறி, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கடந்த ஆண்டு டிரம்ப் வரி விதித்தார்.

நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பதிலாக, 1977-ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி டிரம்ப் நிர்வாகம் இந்த வரிகளை விதித்தது.

ஆகஸ்ட் 2025 இல், அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் டிரம்பின் பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று தீர்ப்பளித்தது, ஆனால் அவை அமலில் இருக்க அனுமதிக்கப்பட்டன.

By admin