• Thu. Jan 8th, 2026

24×7 Live News

Apdin News

‘இந்தியா என்னை மகிழ்விக்க விரும்பியது’ – டிரம்ப் கருத்துக்கு விளக்கம் கேட்டு கொதிக்கும் எதிர்க்கட்சிகள்

Byadmin

Jan 6, 2026


'நான் மகிழ்ச்சியாக இல்லை என மோதிக்கு தெரியும்' -  டிரம்பின் கருத்துக்கு பதில் கோரும் எதிர்க்கட்சிகள்

பட மூலாதாரம், Reuters

ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது மற்றும் அமெரிக்காவின் வரிகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கருத்து கூறியுள்ளார்.

ரஷ்யாவுடன் இந்தியா தொடர்ந்து வர்த்தகம் செய்தால், அதன் மீதான வரிகள் விரைவில் அதிகரிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

டிரம்பின் வரிகள் காரணமாக, இந்தியா இப்போது ரஷ்யாவிடமிருந்து குறைந்த எண்ணெய் வாங்குகிறது என்று டிரம்புடன் இருந்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் கூறினார்.

டிரம்ப் மற்றும் கிரஹாமின் கருத்துக்களைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசைக் கண்டித்துள்ளன. இது இந்தியாவை அவமதிப்பதாகும் என்றும், பிரதமர் மோதி பதிலளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரியுள்ளது.

அதே நேரத்தில், ஆம் ஆத்மி கட்சி, “மோதி, உங்கள் மௌனம் நாட்டின் கௌரவத்தைப் பாதிக்கிறது” என்று கூறியுள்ளது.

By admin