• Thu. Oct 31st, 2024

24×7 Live News

Apdin News

இந்தியா – கனடா: அமெரிக்க பத்திரிகையிடம் அமித்ஷா பெயரை குறிப்பிட்டது யார்? கனடா அமைச்சர் தகவல்

Byadmin

Oct 31, 2024


இந்தியா -  கனடா,  அமித் ஷா

பட மூலாதாரம், HOUSE OF COMMONS, CANADA

படக்குறிப்பு, கனடாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மோரிசன்

கனடா குடிமக்களை அச்சுறுத்தும் அல்லது கொல்லும் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் ஒப்புதல் அளித்ததாக அந்நாட்டின் குடிமைப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக் குழுவிடம் கனடாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை (அக்டோபர் 29) அன்று கனடாவில் குடிமைப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக் குழுவின் விசாரணை ஒன்று நடந்தது.

அப்போது, அக்குழுவின் துணைத் தலைவரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரக்கேல் டான்சோ கனேடிய குடிமக்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பினார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வான்கூவர் அருகே 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார்.

By admin