• Fri. Nov 15th, 2024

24×7 Live News

Apdin News

இந்தியா – கனடா: இந்திய மாணவர்கள் உயர் கல்வி பயில கனடா செல்வதில் புதிய சிக்கல் – என்ன காரணம்?

Byadmin

Nov 9, 2024


இந்தியா - கனடா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உதவும் வகையில் கனடாவில் நடைமுறையில் இருந்த ‘ஸ்டூடண்ட் டைரக்ட் ஸ்ட்ரீம் (SDS)’ என்ற திட்டத்தை கைவிடுவதாக கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. நைஜீரிய மாணவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட ‘நைஜீரியா ஸ்டூடெண்ட் எக்ஸ்பிரஸ்’ (NSE) என்ற திட்டமும் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடா அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தில் அந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வெளி நாட்டு மாணவர்களுக்கான படிப்பு அனுமதி விண்ணப்பங்களை சரிபார்க்கும் செயல்முறையை நியாயமாகவும், சமமாகவும் வைத்திருக்க கனடா உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளது.

SDS என்ற திட்டம் 2018-ஆம் ஆண்டு, கல்லூரி படிப்பை மேற்கொள்ள கனடாவில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனை செய்ய உருவாக்கப்பட்ட திட்டமாகும்.

இந்தியா, பாகிஸ்தான், சீனா, பிரேசில், ஆன்டிகுவா மற்றும் பார்படாஸ், கொலம்பியா, கோஸ்டாரிகா, மொராக்கோ, பெரு, பிலிப்பைன்ஸ், செனேகல், செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் வியட்நாம் ஆகிய நாட்டு மாணவர்களுக்காக SDS திட்டம் உருவாக்கப்பட்டது.

By admin