• Wed. Oct 16th, 2024

24×7 Live News

Apdin News

இந்தியா – கனடா உறவில் விரிசல் சரியாகுமா? ட்ரூடோ அறிக்கையின் பின்னணியில் அமெரிக்கா உள்ளதா?

Byadmin

Oct 16, 2024


இந்தியா கனடா விவகாரம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஜி 20 மாநாட்டிற்காக இந்தியா வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை இந்திய பிரதமர் மோதி வரவேற்ற காட்சி

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனட நாட்டு பிரஜையான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்த கொலைக்கு இந்தியா தான் காரணம் என்று குற்றம்சாட்டினார். அதனை இந்தியா முழுமையாக நிராகரித்தது. அதன் பிறகு இரு நாடுகளும் அவரவர் பிரதிநிதிகளை சொந்த நாடுகளுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர்.

இதன் பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையே சூடான கருத்து மோதல் ஏற்பட்டது. தற்போது இருநாட்டு உறவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த உறவை சீராக்க சிறிய அளவில் சாத்தியம் இருப்பதாகவும் தோன்றுகிறது.

சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தானிய இயக்கத்தை ஆதரித்து, கனடாவில் வாழும் சீக்கியர்கள் வன்முறையை தூண்டிவருவதாக இந்தியா நம்புகிறது. இது தான் இரு நாட்டுக்கும் இடையே நிலவும் முக்கிய பிரச்னை.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, பஞ்சாபில் ஏற்பட்ட வன்முறையின் ஒரு மோசமான தருணத்தில் இந்திய ராணுவம் அமிர்தசரஸ் பொற்கோயிலில் தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதன் பிறகு 1984-ஆம் ஆண்டு இந்தியாவின் அன்றைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி இரண்டு சீக்கிய மெய்க்காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

By admin