• Thu. Dec 26th, 2024

24×7 Live News

Apdin News

இந்தியா கூட்டணியின் வெற்றியை கொண்டாட எதிர்நோக்கியுள்ளோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

Byadmin

Dec 22, 2024


டெல்லியில் கலைஞர் கருணாநிதியின் 101 ஆவது பிறந்தநாள் ஒட்டி இந்தியா கூட்டணி தலைவர்களான சோனியா காந்தி, ராகுல்காந்தி, பரூக் அப்துல்லா, சீதாராம் யெச்சூரி, டி. ராஜா ஆகியோர் கலைஞர் கருணாநிதி உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கலைஞர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தியதைக் குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

“கலைஞர் கருணாநிதியை மாநில தலைவராக மட்டுமின்றி தேசிய அளவிலான தலைவராக போற்றி வணங்குகிறோம்

தேசக் கட்டுமானத்தில் முக்கிய பங்காற்றிய கலைஞர் கூட்டாட்சி மற்றும் மக்களாட்சிக்காக குரல் கொடுத்தவர்

பல பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களை முடிவு செய்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் கலைஞர்

நமது கூட்டணியின் வெற்றியை, இந்திய மக்களுக்கான வெற்றியை கொண்டாட எதிர்நோக்கியுள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.

By admin