• Thu. Dec 25th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா-சீனா உறவு பற்றி அமெரிக்க பாதுகாப்பு அறிக்கை கூறுவது என்ன?

Byadmin

Dec 25, 2025


அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை குறித்து சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை குறித்து சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான உறவுகள் குறித்தும் சீனாவுடனான பாகிஸ்தானின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்துவருவது குறித்தும் சில கருத்துகள் வெளியாகியுள்ளது.

‘சீனக் குடியரசு தொடர்பான ராணுவம் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகள்’ என பெயரிடப்பட்டுள்ள ஆண்டு ஆய்வறிக்கை, அமெரிக்க செனட் அவையிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியில் இந்தியாவுடனான பதற்றத்தைக் குறைப்பதன் மூலம், அந்தச் சூழலைப் பயன்படுத்தி சீனா ஆதாயம் அடைய விரும்புகிறது.

மேலும், சீனா புதிதாக கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகளுடன் 100க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் சேர்த்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இதற்கு சீன வெளியுறவு அமைச்சக கண்டனம் தெரிவித்துள்ளது. “அமெரிக்கர்களிடமிருந்து இதே போன்ற கதையை மீண்டும் மீண்டும் கேட்டு வருகிறோம்,” என சீனா தெரிவித்துள்ளது.

மற்றொருபுறம், தென் சீன கடல் , சென்காகு தீவுகள் மற்றும் அருணாச்சல பிரதேசம் தொடர்பாக, சீனா கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin