• Tue. May 20th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா – சீனா: ரஷ்ய அமைச்சர் லாவ்ரோவ் இந்தியாவை எச்சரிக்கிறாரா? அல்லது அச்சத்தின் வெளிப்பாடா?

Byadmin

May 20, 2025


ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜேய் லாவ்ரோவ், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் , இந்தியா, ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கடந்த வாரம் கூறுகையில், மேற்கு நாடுகள் இந்தியாவையும் சீனாவையும் எதிரெதிராக நிறுத்துவதன் மூலம் பதற்றத்தை அதிகப்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்தார்.

லாவ்ரோவ் கூறுகையில், “ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை இந்தோ-பசிபிக் என மேற்கு நாடுகள் அழைக்க ஆரம்பித்திருக்கின்றன. சீனாவுக்கு எதிரான கொள்கையை மேற்கு நாடுகள் ஊக்குவிப்பது தெளிவாக தெரிகிறது. எங்களின் சிறந்த நட்பு நாடான இந்தியா மற்றும் அதன் அண்டை நாடான சீனாவுக்கு இடையேயான மோதலை அதிகப்படுத்தவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மேற்கு நாடுகள் இந்த பிராந்தியத்தில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த விரும்புகின்றன. மேற்கு நாடுகளின் இந்த கொள்கையை ‘பிரித்தாளும் கொள்கை’ என புதின் விவரித்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இந்தியா-சீனா உறவில் மேற்கு நாடுகளின் பங்கு குறித்து விமர்சிப்பது இது முதன்முறை அல்ல.

2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் பேசிய லாவ்ரோவ், “ஒற்றை துருவ உலகத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு மேற்கு நாடுகள் விரும்புகின்றன. ஆனால், ரஷ்யாவும் சீனாவும் அதற்கு அடிபணியாது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மேற்கு நாடுகளின் குவாட் போன்ற அமைப்பு காரணமாக, இந்தியா தற்போது சீனாவுக்கு எதிரான கொள்கையின் கைப்பாவையாக உள்ளது,” என தெரிவித்தார்.

By admin