• Thu. Feb 5th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா டிரம்ப் விரும்புவது போல் ரஷ்யாவுக்குப் பதில் வெனிசுவேலா எண்ணெய் வாங்கினால் என்ன பிரச்னை?

Byadmin

Feb 5, 2026


இந்தியா ரஷ்யாவிற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவிலிருந்து எண்ணெய் வாங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

இந்தியா ரஷ்யாவிற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவிலிருந்து எண்ணெய் வாங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

வெனிசுவேலா தற்போது மறைமுகமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் அமெரிக்க நிறுவனங்கள் அதன் எண்ணெய் துறையில் முதலீடு செய்து வருகின்றன.

இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை முழுமையாக நிறுத்தினால், வெனிசுவேலாவால் அதை ஈடுசெய்ய முடியுமா?

ஆற்றல் நுண்ணறிவு அறிக்கை, வெனிசுவேலாவால் ஓரளவு மட்டுமே உதவ முடியும் என்று தெரிவிக்கிறது.

ஆற்றல் நுண்ணறிவு அறிக்கையின்படி, இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம் மட்டுமே வெனிசுவேலாவின் கச்சா எண்ணெயை அதிக அளவில் தொடர்ந்து சுத்திகரிக்கும் திறன் கொண்டது. மற்ற இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு, வெனிசுவேலா எண்ணெய் என்பது ஒரு கடினமான மற்றும் ஆபத்தான செயல்பாடாகவே உள்ளது.

By admin