• Sun. May 18th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா – துருக்கி பதற்றம் தணியுமா? மோதி – எர்துவான் அரசியல் கொள்கையில் ஒற்றுமை உள்ளதா?

Byadmin

May 18, 2025


மோதிக்கும் எர்டோகனுக்கும் இடையிலான ஒப்பீடுகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பிரதமர் மோதியின் அரசியலும் துருக்கி அதிபர் எர்துவானின் அரசியலும் அவ்வபோது ஒப்பிட்டு பேசப்படுகிறது.

  • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

துருக்கி அதிபர் ரசீப் தய்யீப் எர்துவானுக்கு இந்த வாரம் சிறப்பானதாக இருந்தது.

துருக்கியில் ஆயுதமேந்திய பிரிவினைவாத இயக்கத்திற்கு தலைமை தாங்கிய குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) தானே கலைத்துக் கொண்டது. எர்துவானுக்குநெருக்கமாக இருந்த சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை டிரம்ப் நீக்கினார்.

யுக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை துருக்கியில் நடந்துள்ளது. புதிய போப் விரைவில் துருக்கிக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். துருக்கி ஆதரவு பெற்ற லிபிய பிரதமர் அதிகாரத்தின் மீதான தனது பிடியை வலுப்படுத்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக உதவிய எர்துவானுக்குபாகிஸ்தான் நன்றி தெரிவித்துள்ளது.

மறுபுறம், கடந்த இரண்டு வாரங்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு மிகவும் சவாலானவையாக இருந்தன. ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, மே 6 மற்றும் 7-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவில் இந்தியா பாகிஸ்தானில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது, அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் மற்றும் எதிர் தாக்குதல்கள் நடந்தன. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போது, அதற்கான பெருமையை அமெரிக்கா எடுத்துக் கொண்டது. அமெரிக்கா இந்தியாவை வழிநடத்துகிறது என்ற செய்தி பரவியது.

By admin