• Tue. Jan 20th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா, பாகிஸ்தானை சேருமாறு டிரம்ப் அழைக்கும் காஸா அமைதி வாரியத்தில் யாரெல்லாம் உள்ளனர்?

Byadmin

Jan 20, 2026


காஸா அமைதி வாரியம், அமெரிக்கா, டிரம்ப், இந்தியா, பாகிஸ்தான்

பட மூலாதாரம், PRAKASH SINGH/AFP via Getty Images

படக்குறிப்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் பிரதமர்களும் இந்த அமைப்பில் இணைவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

காஸாவிற்காக டிரம்ப் நிர்வாகம் உருவாக்கியுள்ள புதிய ‘அமைதி வாரியத்தில்’ இணையுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை அனுப்பிய கடிதத்தை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

“அதிபர் டிரம்ப் சார்பாக, பிரதமர் நரேந்திர மோதியை காஸா அமைதி வாரியத்தில் பங்கேற்க அழைப்பதில் நான் பெருமை கொள்கிறேன். இந்த வாரியம் காஸாவில் நிலையான அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பிற்கான ஒரு பயனுள்ள நிர்வாகத்திற்கு ஆதரவளிக்கும்”என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தகவல்படி, ‘அமைதி வாரியத்தில்’ இணைய பாகிஸ்தானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் பிரதமர்களும் இந்த அமைப்பில் இணைவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

By admin