• Fri. May 9th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா பாகிஸ்தான் பதற்றம் – என்ன நடக்கிறது? நேரலை

Byadmin

May 8, 2025


'இந்தியாவின் தாக்குதலில் இறந்தவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள்', இந்திய வெளியுறவுச் செயலாளர் செய்தியாளர் சந்திப்பு

பட மூலாதாரம், MEA

படக்குறிப்பு, விங் கமாண்டர் வ்யோமிகா சிங், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி

இந்தியா- பாகிஸ்தான் மோதல் தொடர்ந்து வருவது குறித்து, இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வ்யோமிகா சிங் மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி, செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர்.

இந்தியாவின் தாக்குதலில் இறந்தவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள்தான் என்று கூறிய மிஸ்ரி, “பாகிஸ்தான் மேற்கொண்டு தாக்கினால், பதிலடி தரப்படும்” என்று கூறினார்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியில் மே 7 அதிகாலையில் தாக்குதல் நடத்தியது.

இரு நாடுகள் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பதற்றத்தைக் குறைக்குமாறு ஐ.நாவும் பாகிஸ்தானையும் இந்தியாவையும் கேட்டுக் கொண்டுள்ளன.

By admin