இந்தியா – பாகிஸ்தான் மோதல் எவ்வாறு பரிணமிக்கும்? முழு பார்வை
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகள் செயல்பட்டு வந்த ஒன்பது இடங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தியதாக இந்தியா தெரிவித்திருந்தது. இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என இந்திய அரசு கூறியுள்ள நிலையில் பாகிஸ்தான் அரசு அதனை மறுத்துள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தான்ல் இருந்து டிரோன் மற்றும் ஷெல் குண்டு தாக்குதல் நடந்ததாக இந்தியா தெரிவித்திருந்தது. இத்தகைய சூழலில் அடுத்தக்கட்ட நிகழ்வுகள் பற்றி பல தரப்பட்ட பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள் அடுத்து எந்த இடத்தை நோக்கி நகரும் என்பது பற்றியும் யூகங்கள் நிலவுகின்றன.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு