• Tue. Apr 7th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா போன்ற நாடுகளின் கப்பல்கள் ஹோர்மூஸை கடந்தாலும் பதில் தெரியாத 2 விஷயங்கள்

Byadmin

Apr 7, 2026


திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவை (LPG) ஏற்றி வந்த 'நந்தா தேவி' என்ற இந்தியக் கப்பல், குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள வாடினார் துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணையை கடந்து சென்ற ஓர் இந்திய எண்ணெய் கப்பல்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்திற்கு வாஷிங்டன் டிசி நேரப்படி செவ்வாய் இரவு 20:00 மணிக்குள் (புதன்கிழமை 00:00 GMT) இரான் ஒப்புக்கொள்ளத் தவறினால், அந்த நாடு “ஒரே இரவில்” அழிக்கப்படும் என திங்கட்கிழமை அன்று மிரட்டல் விடுத்தார்.

ஆனால் அவரது இந்த சமீபத்திய மிரட்டலுக்கு முன்பே, சில நாடுகள் இரானுடன் ஒப்பந்தம் செய்து தங்களின் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணை வழியாக பாதுகாப்பாக செல்ல ஏற்பாடு செய்துவிட்டன.

ஆசிய நாடுகள் இந்த ஒப்பந்தங்களை எட்டுவதில் குறிப்பாக ஆர்வமாக உள்ளன. ஏனெனில் அவற்றின் பொருளாதாரங்கள் பாரசீக வளைகுடாவிலிருந்து வரும் எரிசக்தியைப் பெரிதும் நம்பியுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஹோர்மூஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களைத் தாக்குவோம் என்று இரான் அச்சுறுத்தியதை அடுத்து, இந்த முக்கியப் போக்குவரத்துப் பாதை உலகளாவிய பதற்றப் புள்ளியாக மாறியுள்ளது.

ஹோர்மூஸ் நீரிணை

உலகின் ஐந்தில் ஒரு பங்கு எரிசக்திப் போக்குவரத்து நடைபெறும் அந்த குறுகிய நீர் வழித்தடத்தில், கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்ட இடையூறால் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

By admin