• Fri. Apr 4th, 2025

24×7 Live News

Apdin News

‘இந்தியா மிகவும் மோசம்’ – டிரம்ப் கூறியது என்ன? இந்திய பொருட்களுக்கு எவ்வளவு வரி?

Byadmin

Apr 3, 2025


'இந்தியா மிகவும் மோசம்' - டிரம்ப் கூறியது என்ன? இந்திய பொருட்களுக்கு எவ்வளவு வரி?

பட மூலாதாரம், Reuters

டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 2ஆம் தேதியன்று அவரது புதிய பரஸ்பர வரி விதிப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த வரி விதிப்பு அமெரிக்காவின் வெற்றிக்கு வித்திடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிர்வாக உத்தரவின் மூலம் டிரம்ப் விதித்துள்ள வரிகள், உலகம் முழுவதும் பொருளாதார அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளை மாளிகை சுமார் 100 நாடுகளின் பட்டியலையும், அவற்றுக்கு அமெரிக்கா விதிக்கும் வரி விகிதங்களையும் வெளியிட்டது.

இந்தப் பரஸ்பர வரி விதிப்பு திட்டத்தின் அடிப்படைக் கூறுகள் என்ன? இதன் அடிப்படையில் இந்தியாவுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது?

இறக்குமதிப் பொருட்களுக்கு அடிப்படை வரி விகிதம்

டிரம்பின் உரைக்கு முன்பாக, வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிபர் அனைத்து நாடுகளுக்கும் “அடிப்படை வரி” விதிக்கப்படும் என்று தெரிவித்ததாக கூறினார்.

By admin