• Tue. Feb 3rd, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா மீதான வரியை 18%-ஆக அமெரிக்கா குறைத்தது – டிரம்ப், மோதி கூறியது என்ன?

Byadmin

Feb 3, 2026


இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம், வரி குறைப்பு, டிரம்ப் - மோதி

பட மூலாதாரம், @USAmbIndia

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை 18% ஆக அமெரிக்கா குறைத்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் சமூக ஊடகம் மூலம் இதனை அறிவித்துள்ளனர்.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டு விட்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும் மோதியின் பதிவில் வர்த்தக ஒப்பந்தம் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டதாகவும் அதன் கீழ் இந்தியா மீதான பரஸ்பர வரியை 25 சதவிகிதத்திலிருந்து 18 சதிவிகிதமாக குறைப்பதாகவும் தனது ட்ரூத் சோசியல் பதிவில் தெரிவித்திருந்தார் டிரம்ப்.

“இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மீதான வரி 18% ஆக குறைக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி,” என பிரதமர் மோதி தெரிவித்திருந்தார்.

By admin