• Wed. Jun 17th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா முழுக்க திமுக உள்ளிட்ட பிராந்திய கட்சிகள் பலவீனமடைகிறதா?

Byadmin

Jun 17, 2026


இந்தியா முழுக்க பிராந்திய கட்சிகள் பலவீனமடைந்து வருவது ஏன்? எதிர்கால அரசியல் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், DMK/X

படக்குறிப்பு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றியவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோதி பெற்றுள்ளார் என்று ஜூன் 10ஆம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது.

அரசாங்கமே உருவாக்கி முன்னிலைப்படுத்திய ஒரு சாதனை இது என்று கூறி காங்கிரஸ் கட்சி இந்த அறிவிப்பை விமர்சித்தது. இருப்பினும், ஒரு விஷயம் தெளிவாக உள்ளது. கடந்த 12 ஆண்டுகளில், பிரதமர் மோதியின் தலைமை இந்திய அரசியலில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

“காங்கிரஸ் இல்லாத இந்தியாவை” உருவாக்கும் முழக்கத்துடன் இந்த அரசியல் பயணம் தொடங்கியது. இப்போது ஒரு புதிய கேள்வி எழுந்துள்ளது: பிராந்திய அரசியல் கட்சிகளின் முக்கியத்துவம் குறைந்து வரும் ஒரு சூழலை நோக்கி இந்தியா நகர்கிறதா?

முன்பெல்லாம், மத்தியில் ஆட்சி அமைக்க தேசிய கட்சிகளுக்குப் பெரும்பாலும் பிராந்திய கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. டெல்லியில் யார் ஆட்சிக்கு வருவது என்பதைத் தீர்மானிப்பதில் பிராந்திய கட்சிகள் முக்கியப் பங்காற்றின. ஆனால் இன்று அரசியல் சூழல் மாறி வருவதாகத் தெரிகிறது.

மகாராஷ்டிரா, பிகார், பஞ்சாப், உத்தர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பல பிராந்திய கட்சிகள் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. சில கட்சிகள் உட்கட்சிப் பிளவுகளைச் சமாளித்து வருகின்றன. வேறு சில கட்சிகளோ வாக்காளர்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கைத் தக்கவைக்கப் போராடுகின்றன.

By admin