மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மே 7ஆம் தேதி பாதுகாப்பு ஒத்திகையை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
சிவில் பாதுகாப்புச் சட்டங்களின்படி, இதுபோன்ற ஒத்திகை மற்றும் பயிற்சிகளை நடத்துவதற்கு மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை வெளியிடும் அதிகாரம் உள்துறை அமைச்சகத்திற்கு உள்ளது.
இதற்கு முன், 1971ஆம் ஆண்டு ‘சிவில் பாதுகாப்பு ஒத்திகையை’ நடத்துவதற்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.
அதே வருடம் டிசம்பர் 3ஆம் தேதி, இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் தொடங்கியது. 13 நாட்கள் தொடர்ந்து அப்போரில் பாகிஸ்தான் வீரர்கள் டிசம்பர் 16ஆம் தேதியன்று டாக்காவில் சரணடைந்தனர். அதே நாளில் உலக வரைபடத்தில் சுதந்திர வங்கதேசம் பிறந்தது.