• Sun. Mar 15th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது பற்றி இரான் கூறியது என்ன?

Byadmin

Mar 15, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, ரஷ்ய கச்சா எண்ணெய்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் குறிவைத்தார் (கோப்பு படம்)

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை இரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளை ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குமாறு அமெரிக்கா இப்போது “கெஞ்சிக் கொண்டிருப்பதாக” அவர் கூறினார்.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், கடலில் ஏற்கனவே ஏற்றப்பட்டிருக்கும் ரஷ்ய எண்ணெயை இந்தியா போன்ற நாடுகள் வாங்குவதற்கு அனுமதிக்கும் வகையில், அமெரிக்கா தனது தடைகளைத் தற்காலிகமாகத் தளர்த்தியுள்ள நிலையில் அரக்சி இவ்வாறு கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் மற்றும் தேசிய பாதுகாப்பு குழுவினர் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் செவ்வாய்க்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்தியா பொறுப்பான அணுகுமுறையைக் காட்டியுள்ளதாகவும், தடை செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தியிருந்ததாகவும் அவர் கூறினார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, பெசன்டின் புதிய அறிவிப்பு, ஏப்ரல் 11-ஆம் தேதி வரை கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிப்பதாக அமெரிக்க கருவூலத் துறையின் இணையதளம் தெரிவிக்கிறது.

By admin