• Fri. Mar 6th, 2026

24×7 Live News

Apdin News

‘இந்தியா ரஷ்யாவிடம் 30 நாள் கச்சா எண்ணெய் வாங்கலாம்’ – அமெரிக்கா கூறியது என்ன?

Byadmin

Mar 6, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, ரஷ்யா, எண்ணெய் இறக்குமதி, பெட்ரோல், டீசல் விலை உயருமா,

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா ’30 நாள் விலக்கு’ வழங்கியுள்ளது.

சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகத்தை பராமரிக்க, அமெரிக்க கருவூலத் துறை இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க 30 நாள் விலக்கு அளித்துள்ளதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா கூடுதலாக 25 சதவீத வரியை விதித்ததால், இந்தியா மீதான அமெரிக்காவின் மொத்த வரி 50 சதவீதமாக உயர்ந்திருந்தது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக உறுதியளித்துள்ளது. இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைக்காவிட்டால், இந்தியா மீதான வரி 18% இலிருந்து 25% ஆக உயர்த்தப்படும் எனறு டிரம்ப் அச்சுறுத்தியிருந்தார், இது யுக்ரேனுக்கு எதிராகப் போர் தொடுக்கும் ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.

By admin