• Sun. May 18th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா ரோஹிஞ்சா அகதிகளை நடுக்கடலில் இறக்கிவிட்டதா? ஐ.நா விசாரணை

Byadmin

May 18, 2025


ரோஹிஞ்சா அகதிகள், இந்தியா, மியான்மர், ஐ.நா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லியில் அகதிகள் முகாமில் வசிக்கும் ரோஹிஞ்சா அகதிகள்

ரோஹிஞ்சா அகதிகள் இந்திய கடற்படை கப்பலில் இருந்து மியான்மர் கரையோரம் நடுக்கடலில் இறக்கிவிடப்பட்டதாக எழுந்துள்ள கூற்றை விசாரிக்கப்போவதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழன் அன்று ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த வாரம் இந்திய கடற்படை கப்பலில் இருந்து ரோஹிஞ்சா அகதிகள் வலுக்கட்டாயமாக அந்தமான் கடலில் இறக்கிவிடப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் எங்களுக்கு மிகவும் கவலையளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளது. மேலும் இத்தகைய “தேவையற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம்” தொடர்பாக நிபுணர் ஒருவர் விசாரணை நடத்துவார் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, டெல்லி காவல்துறை ரோஹிஞ்சா அகதிகளை அவர்களின் முகாம்களில் இருந்து பிடித்துச் சென்றதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானது.

ஆனால் இந்தச் செய்திகள் பற்றி தற்போது வரை இந்திய அரசாங்கமோ அல்லது இந்தியக் கடற்படையோ எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.

By admin