• Mon. Mar 16th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா – வங்கதேசம் உறவை மேம்படுத்த ‘டீசல் ராஜதந்திரம்’ உதவுமா? ஒரு பகுப்பாய்வு

Byadmin

Mar 16, 2026


இந்தியா - வங்கதேசம், டீசல் ராஜதந்திரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவிலிருந்து 5000 மெட்ரிக் டன் டீசல் வங்கதேசத்திற்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மத்திய கிழக்கில் வெடித்துள்ள போரினால், உலகிலுள்ள பல நாடுகளைப் போலவே வங்கதேசமும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.

வங்கதேசம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. தங்களுக்குத் தேவையான அளவு எரிபொருள் வழங்கப்படுவதில்லை என்று மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இச்சூழலுக்கு இடையில், இந்தியாவிலிருந்து 5000 மெட்ரிக் டன் டீசல் வங்கதேசத்திற்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க இந்தியாடம் மேலும் 50,000 மெட்ரிக் டன் டீசலை தந்து உதவுமாறு வங்கதேசம் கேட்டுள்ளது, ஆனால் இந்தியா இன்னும் இதற்குப் பதிலளிக்கவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது மோதி அரசு அதனை வரவேற்றிருந்தாலும், வங்கதேசத்தின் பி.என்.பி கட்சியுடன் (பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி) இந்தியாவின் உறவு வழக்கமாகவே சுமூகமாக இருந்ததில்லை.

By admin