• Sat. May 3rd, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா, வங்கதேசம் வர்த்தக கட்டுப்பாடுகளால் நிறுவனங்கள் கலக்கம் – இனி என்னாகும்?

Byadmin

May 3, 2025


இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான உறவு கடந்த சில மாதங்களாக மோசமடைந்து வருகிறது

பட மூலாதாரம், Press Information Bureau

படக்குறிப்பு, இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான உறவு கடந்த சில மாதங்களாக மோசமடைந்து வருகிறது

பல மாதங்களாக வார்த்தை மோதலில் ஈடுபட்டு வந்த இந்தியாவும் வங்கதேசமும் சமீபத்தில் பரஸ்பர வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இதன் விளைவாக ஏற்படக்கூடிய பாதிப்புக்கு வணிக நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

மலிவான இறக்குமதிகளால் உள்ளூர் தொழில்கள் பாதிக்கப்படாதவாறு பாதுகாக்கும் நோக்கில், இந்தியாவிலிருந்து நிலம் வழியாக நூல் இறக்குமதி செய்வதற்கு கடந்த மாதம் வங்கதேசம் கட்டுப்பாடு விதித்தது.

2020 முதல் நடைமுறையில் உள்ள வங்கதேசப் பொருட்களை இந்தியா வழியாக ஏற்றுமதி செய்யும் வசதியினை (டிரான்ஷிப்மென்ட் ) இந்தியா திரும்பப் பெற்றதை தொடர்ந்து வங்கதேசம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

By admin