• Mon. Feb 16th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா – வங்கதேச உறவை மீட்டெடுக்க செய்ய வேண்டிய 2 முன்னெடுப்புகள் என்ன?

Byadmin

Feb 16, 2026


வங்கதேசம் , இந்தியா பாகிஸ்தான், தாரிக் ரஹ்மான்

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

படக்குறிப்பு, தாரிக் ரஹ்மான்

வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் வங்கதேச தேசியவாதக் கட்சி(பிஎன்பி) அமோக வெற்றி பெற்ற நிலையில், மிகவும் கவனமுடன் கூடிய இணக்கமான அணுகுமுறையை இந்தியா வெளிப்படுத்தியது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மானின் இந்த “தீர்க்கமான வெற்றிக்கு” தனது வாழ்த்துச் செய்தியை வங்க மொழியில் பதிவிட்டார்.

“ஜனநாயக, முற்போக்கான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய” அண்டை நாட்டுக்கு இந்தியாவின் ஆதரவை அவர் உறுதி அளித்தார். மேலும், “நமது பன்முக உறவை” வலுப்படுத்த நெருக்கமாகப் பணியாற்ற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வருங்காலத்தை நோக்கியதாக இருந்த இந்த அணுகுமுறை, அதே சமயம் எச்சரிக்கையுடனும் இருந்தது கவனிக்கத்தக்கது.

ஜென் ஸி தலைமையிலான ஜூலை 2024 எழுச்சிக்குப் பிறகு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதுடன், இரு தரப்பிலும் அவநம்பிக்கை அதிகரித்துள்ளது. நாட்டின் மிகப் பழமையான கட்சியான ஹசீனாவின் அவாமி லீக் கட்சி, தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

By admin