• Tue. Feb 17th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா ஹசீனாவை தங்க வைத்துக் கொண்டு, வங்கதேச புதிய அரசுடன் உறவை எவ்வாறு பராமரிக்கும்?

Byadmin

Feb 17, 2026


இந்தியா - வங்கதேசம், தாரிக் ரஹ்மான் - ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாரிக் ரஹ்மான் (இடது), ஷேக் ஹசீனா (வலது)

ஆகஸ்ட் 2024-ல் வங்கதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவுகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தது மட்டுமின்றி, சிறுபான்மையினரின் உரிமைகள் போன்ற பல விவகாரங்களில் கசப்புணர்வும் காணப்பட்டது.

ஆனால் தற்போது பொதுத்தேர்தலுக்குப் பிறகு, வங்கதேசத்தின் அரசியல் சூழல் மாறியுள்ளது. வங்கதேச தேசியவாத கட்சி (பி.என்.பி) கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு இடங்களுக்கு மேல் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.

ஜமாஅத்-இ-இஸ்லாமி எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

பி.என்.பி தலைவரும் முன்னாள் பிரதமருமான காலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் இப்போது நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளார்.

By admin