• Sat. Feb 28th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா Vs ஜிம்பாப்வே: சஞ்சு சாம்சன் இந்திய அணியின் வெற்றிக்கு எப்படி உதவினார்?

Byadmin

Feb 28, 2026


சஞ்சு சாம்சன் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது இந்திய அணி. 256 ரன்கள் எடுத்து டி20 உலகக் கோப்பை வரலாற்றின் இரண்டாவது பெரிய ஸ்கோரைப் பதிவு செய்தது இந்தியா.

இந்தத் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுந்துவந்த நிலையில் வந்திருக்கிறது இந்த செயல்பாடு.

இந்திய தொடக்க ஜோடியின் செயல்பாடு, அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா ஆகியோரின் தனிப்பட்ட செயல்பாடுகள் மீது விமர்சனங்கள் இருந்தன. ஆனால், இந்தப் போட்டியில் அந்த பிரச்னைகள் எதுவும் வெளிப்படவில்லை. அனைத்துமே இந்தியாவுக்கு சரியாகவே நடந்தன.

சஞ்சு சாம்சன் இந்திய அணியின் பிளேயிங் லெவனுக்கு வந்தது பல வகைகளில் இந்த செயல்பாட்டுக்கு காரணமாகியிருக்கிறது.

இந்த உலகக் கோப்பையில் இந்திய தொடக்க ஜோடி:

By admin