• Sun. May 11th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியா vs பாகிஸ்தான்: சீனா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இரான் ஆதரவு யாருக்கு?

Byadmin

May 11, 2025


இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் முழு பிராந்தியத்திற்கும் மிக முக்கியமான நிகழ்வாகும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் முழு பிராந்தியத்திற்கும் மிக முக்கியமான நிகழ்வாகும் (குறியீட்டு படம்)

  • எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே
  • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது.

வியாழக்கிழமை இரவு, ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ராணுவ நிலையங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், அவை முறியடிக்கப்பட்டதகவும் இந்தியா கூறியது.

இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் மறுத்துள்ளார்.

“நம்பகமான தகவலின்படி, லாகூரில் ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது” என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது .

By admin