• Wed. Dec 3rd, 2025

24×7 Live News

Apdin News

இந்திய அரசின் ஜிடிபி புள்ளிவிவரங்களில் குளறுபடியா? ஐ.எம்.எஃப் அறிக்கை சொல்வது என்ன?

Byadmin

Dec 3, 2025


பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியை 7.3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறியுள்ளது.

அண்மையில் இந்திய அரசு, 2025-26 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 8.2% வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும், இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த 5.6% வளர்ச்சியைவிட அதிகம் என்றும் கூறியுள்ளது.

இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரம் என்ற தனது நிலையை இந்தியா மேலும் பலப்படுத்தியுள்ளது. ஒருபுறம் இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டை 7.3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவித்துள்ள நிலையில், மறுபுறம், ஐ.எம்.எஃப். எனப்படும் சர்வதேச நாணய நிதியம் தனது சமீபத்திய அறிக்கையில், இந்தியாவின் ஜிடிபி மற்றும் தேசிய கணக்குகள் தரவுகளின் தரத்திற்கு ‘சி’ தரவரிசையை அளித்துள்ளது.

இதையடுத்து, ஜிடிபி புள்ளிவிவரங்கள் வளர்ச்சியைச் சுட்டிக் காட்டும்போது, ஐ.எம்.எஃப். ‘சி’ தரவரிசையை வழங்கியது ஏன் என்ற விவாதம் எழுந்துள்ளது.

இந்த விவாதத்தை பாஜக நிராகரித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவுக்குப் பதிலளித்த பாஜகவின் அமித் மாளவியா, “பலவீனமான ஐந்து’ பொருளாதாரங்களில் ஒன்று என்ற நிலையில் அவர் இந்தியாவை விட்டுச் சென்றார். ஆனால், நாடு தற்போது அப்படி இல்லை என்பதை அவரது கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை என்பதால் முன்னாள் நிதியமைச்சர் பீதியைப் பரப்புவது கவலையளிக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், “ஐ.எம்.எஃப். தனது வருடாந்திர ஆய்வில் இந்தியாவின் தேசிய கணக்கு புள்ளிவிவரங்களுக்கு ஏன் ‘சி’ கிரேடு வழங்கியது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

By admin