• Thu. Apr 3rd, 2025

24×7 Live News

Apdin News

இந்திய அரசு தங்கம் வைப்புத் திட்டத்தை திடீரென நிறுத்தியது ஏன்? டிரம்ப் காரணமா?

Byadmin

Apr 2, 2025


தங்கம் வைப்பு திட்டத்தை நிதி அமைச்சகம் நிறுத்தியது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் எளிய மக்களின் வாழ்வில், தங்கம் ஒரு முக்கியமான முதலீடாகப் பார்க்கப்படுகிறது. தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டாலும், தங்கம் ஒரு நிலையான முதலீடு என்பதால், மக்கள் மனதில் தங்கத்திற்கு நீங்கா இடம் உள்ளது.

நகை, நாணயம், கட்டித் தங்கம், பத்திரங்கள் எனப் பல்வேறு வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட தங்கம் வைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியை சமீபத்தில் இந்திய அரசு நிறுத்தியுள்ளது.

தங்கம் வைப்புத் திட்டம் என்றால் என்ன? இதன் ஒரு பகுதியை அரசு நிறுத்துவதற்கான காரணம் என்ன? இதற்கும் டிரம்பின் நடவடிக்கைகளுக்கும் தொடர்பு உள்ளதா?

தங்கம் வைப்புத் திட்டம் என்றால் என்ன?

தங்கம்

பட மூலாதாரம், Getty Images

தங்க வைப்பு நிதித் திட்டம் (Gold Monetisation Scheme – GMS) என்பது இந்திய அரசாங்கத்தால் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டம்.

By admin