• Mon. Mar 16th, 2026

24×7 Live News

Apdin News

இந்திய எரிவாயு கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்தது எப்படி?

Byadmin

Mar 16, 2026


2 இந்திய  கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையை கடந்தது எப்படி?

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு, சிவலிக் கப்பல் இந்தியாவின் முந்தரா துறைமுகத்தை வந்து சேர்ந்தது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இரு திரவ பெட்ரோலிய எரிவாயு கப்பல்களான நந்தா தேவி மற்றும் சிவலிக் ஆகியவை கடந்த சனிக்கிழமை ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்துள்ளன.

கப்பல்களின் பயணத்தை கண்காணிக்கும் இணையதளம் மரைன் டிராபிக் வழங்கிய தகவலின்படி, இந்த இரண்டு கப்பல்களும் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள துறைமுகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தன.

கப்பல்களின் பயணத் தகவல்கள்படி, நந்தா தேவி மற்றும் சிவலிக் ஆகிய இரு கப்பல்களும் கத்தாரில் உள்ள துறைமுகத்தில் எரிவாயுவை ஏற்றியுள்ளன.

அதன் பிறகு அவை ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்கும்போது தானியங்கி அடையாள அமைப்பு (AIS – ஏஐஎஸ்) என்ற சிக்னலை அணைத்துவிட்டு பயணம் செய்துள்ளன.

2 இந்திய எரிவாயு கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையை கடந்தது எப்படி?

பட மூலாதாரம், MarineTraffic

படக்குறிப்பு, புள்ளி கோடு அந்த கப்பல்கள் எவ்வாறு சென்றிருக்கலாம் என்று கணிக்கப்பட்ட பாதையைக் காட்டுகிறது.

ஏஐஎஸ் என்பது கப்பல்கள் தங்கள் இருப்பிடத்தை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் சிக்னல். இதன் மூலம் கப்பல்களின் பயணத்தை இணையத்தில் கண்காணிக்கலாம்.

By admin