• Thu. Oct 8th, 2026

24×7 Live News

Apdin News

இந்திய கடற்படை ரகசியங்கள் பாகிஸ்தானுக்கு விற்பனையா? கோவையில் ஒருவர் உள்பட 2 பேர் கைது

Byadmin

Oct 8, 2026


இந்தியா, பாதுகாப்பு, பாகிஸ்தான், உளவு அமைப்பு, ஆந்திரப் பிரதேச எதிர் உளவுப்பிரிவு

    • எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்கள் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டதாக எழுந்த சந்தேகங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஆந்திரப் பிரதேச உளவுப் பிரிவு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

‘ஆபரேஷன் ஃபயர்வால்-2026’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, 18 சந்தேக நபர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இவர்களில் 13 பேர் கடற்படைப் பணியாளர்கள் என்று ஆந்திரப் பிரதேச உளவுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் முதற்கட்டமாகத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்ட இருவரை போலீஸார் கைது செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எஞ்சிய சந்தேக நபர்களின் பங்களிப்பு குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஏஎன்ஐ மற்றும் பிடிஐ செய்தி நிறுவனங்களின் அறிக்கைகளின்படி, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் தொடர்பான ரகசிய தகவல்கள் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு அனுப்பப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், விஜயவாடாவில் உள்ள உளவுப் பிரிவு காவல் நிலையத்தில் 2026 செப்டம்பர் 2-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

“இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அக்டோபர் 1 அன்று ‘ஆபரேஷன் ஃபயர்வால்-2026’ நடத்தப்பட்டது. இதற்காக 12 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆந்திரப் பிரதேசம் மட்டுமின்றி, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், கோவா, டெல்லி, தமிழ்நாடு, சத்தீஸ்கர் மற்றும் பிகார் ஆகிய மாநிலங்களிலும் இந்தக் குழுக்கள் விசாரணை மேற்கொண்டன.

By admin