• Sat. Feb 28th, 2026

24×7 Live News

Apdin News

இந்திய கிராமத்தில் குழந்தை பிரசவித்த உடன் கொலை செய்யப்பட்ட திருமணமாகாத பெண் – காதலன், தந்தை கைது

Byadmin

Feb 28, 2026


ஆணவ கொலைகளுக்கு எதிராக நடந்த ஒரு போராட்டத்தின் காட்சி

பட மூலாதாரம், Subir HalderThe India Today Group via Getty Images

படக்குறிப்பு, (கோப்புப்படம்)

பிகாரின் மாதேபுராவில் உதாகிஷுன்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருமணமாகாத தாய் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உயிரிழந்த இளம்பெண்ணின் தந்தை அம்பேத் பாரதி மற்றும் மாமா தபேஷ் குமார் யாதவ் ஆகியோர் மீது இந்தக் கொலைக்கான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், திருமணமாகாத அந்த இளம்பெண் பெற்றெடுத்த பெண் குழந்தை, சாலையில் உள்ள ஒரு பாலத்திலிருந்து பையில் கட்டி வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குழந்தையை வீசியதாக அந்த இளம்பெண்ணின் காதலர் ரிஷு ராஜ் மீது குற்றச்சாட்டு உள்ளது. மருத்துவமனை பதிவேடுகளில் அந்த இளம்பெண்ணின் கணவராகவும், பச்சிளம் குழந்தையின் தந்தையாகவும் இவருடைய பெயரே பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதாகிஷுன்கஞ்ச் உட்கோட்ட காவல் அதிகாரி அவினாஷ் குமார் பிபிசி இந்தி சேவையிடம், “இந்த வழக்கில் உயிரிழந்த பெண்ணின் தந்தை அம்பேத் பாரதி, மாமா தபேஷ் குமார் யாதவ் மற்றும் அவரது காதலர் ரிஷு ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

By admin